கடல் கடந்த காதல்… மானாமதுரை என்ஜினீயரை கரம் பிடித்த பிலிப்பைன்ஸ் பெண்..!


சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தயாபுரத்தை சேர்ந்தவர் நிர்வின். என்ஜினீயர். இவர் சிங்கப்பூரில் உள்ள ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார்.

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் மேரிஜேன். இவரும் சிங்கப்பூரில் உள்ள அதே கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.

இந்த திருமணத்துக்கு நிர்வினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து பச்சை கொடி காட்டினர். இதே போல் பிலிப்பைன்ஸ் பெண் மேரிஜேன் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து தமிழ் காலசாரப்படி தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருமண தலமான திருப்பரங்குன்றத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அங்குள்ள ஒரு மண்டபத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமண விழா நடந்தது.

மணமகள் மேரிஜேன் பட்டு சேலை உடுத்தி இருந்தார். மூக்குத்தியும், காதுகளில் தோடு, ஜிமிக்கியும், காலில் கொலுசும் அணிந்து இருந்தார். மேரிஜேன் கழுத்தில் நிர்வின் தாலி கட்டி அவரை கரம் பிடித்தார். இதே போல் தமிழ் கலாசாரப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து மேரிஜேன் கூறும்போது, ‘எனக்கு எல்லாமே புதுமையாக இருக்கிறது, கடல் கடந்த காதல் கைகூடியதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்

நிர்வின் கூறுகையில், ‘தமிழ் கலாசாரம் மற்றும் இந்து முறைப்படி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த என் காதலியை கரம் பிடித்து உள்ளேன். சிங்கப்பூரில் இருவரும் வேலை பார்த்தாலும் எதிர்காலத்தில் மானாமதுரையில் குடியேறுவோம்’ என்று கூறினார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!