6வது மனைவியால் வசமாக சிக்கிய துபாய் மன்னர்..!


துபாய் மன்னர் ஷேக் முகமது பின் ராஷித் அல் மக்டோமை விட்டு அவரது ஆறாவது மனைவியான இளவரசி ஹாயா பின்ட் அல் ஹுசைன் பிரிந்து சென்றுவிட்டார். கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடயை இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டார். அவர் முதலில் ஜெர்மனிக்குச் சென்றதாகவும், ஆனால் அங்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ஹயா தனது குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில் ஹயா தன் கணவரும், துபாய் மன்னருமான ஷேக் முகமதுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், கணவரால் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தன் 11 வயது நிரம்பிய மகளை சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு திருமணம் செய்து வைக்கப் பார்ப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கில் இளவரசி ஹயாவுக்கும், அவரின் குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு தரவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னருக்கு எதிராகத் தீர்ப்பு வந்துள்ளதால் துபாயின் வியாபாரத்துக்குப் பாதிப்பு ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது.-source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!