மாணவர்களுக்கு பிட் பேப்பர்கள் கொடுத்த நபர்கள்… பள்ளியின் காம்பவுண்டுவுக்குள் நடந்த களேபரம்..!


மகாராஷ்டிர மாநிலத்தில் பொதுத்தேர்வு நடந்த பள்ளியின் காம்பவுண்டு சுவரில் ஏறிய சிலர், தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துண்டு சீட்டுகள் வழங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் 10ம் வகுப்பு மெட்ரிகுலேசன் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேடுகளை தடுக்க அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதையும் மீறி சில இடங்களில் மாணவர்கள் காப்பியடித்துள்ளனர்.

இந்நிலையில் யாவத்மால் மாவட்டம் மகாகோன் பகுதியில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளியில் நேற்று தேர்வு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வெளியில் இருந்து வந்த சிலர் மாணவர்களுக்கு துண்டு சீட்டுகளை வழங்கி காப்பியடிக்க உதவி செய்துள்ளனர்.

பள்ளியின் காம்பவுண்டு சுவரில் ஏறி, மாணவர்களுக்கு அவர்கள் துண்டு சீட்டுகளை கொடுக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. இதுபற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘பள்ளி வளாகத்தின் காம்பவுண்டு சுவர் முழுமையாக கட்டி முடிக்கப்படாததால், பாதுகாப்பை அதிகரிக்கும்படி போலீசாரிடம் கேட்டுள்ளோம். முறைகேடு இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு பள்ளி நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது’ என பள்ளியின் தேர்வு மைய அதிகாரி தெரிவித்தார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!