நிர்பயா வழக்கில் பவன் குமார் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு… நடந்தது என்ன..?


நிர்பயா வழக்கில் குற்றவாளி பவன் குமார் குப்தா தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற 4 குற்றவாளிகளையும் மார்ச் 3-ம் தேதி தூக்கிலிடும்படி டெல்லி நீதிமன்றம் புதிய வாரண்ட் பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா, தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் முடிவில் பவன் குமார் குப்தாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சிறார் சட்டப்பிரிவுகளின் கீழ் தனக்கு தண்டனை வழங்க வேண்டும் என கூறி வரும் குற்றவாளி பவன் குமார் குப்தாவின் மனுக்களை டெல்லி உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்தது. தற்போது கடைசி சட்ட வாய்ப்பான மறு சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான வாய்ப்பு மட்டுமே உள்ளது.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!