நூதன வரதட்சணை கேட்ட சப்-கலெக்டர்… நெகிழ்ச்சியாக ஓகே சொன்ன டாக்டர் பெண்..!


தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மனைவியிடம் நூதன முறையில் வரதட்சணை கேட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் ஒட்டங்காடு கிராமத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு இடையே ஐ.ஏ.எஸ். அதிகாரியானவர் சிவகுரு பிரபாகரன். தறபோது நெலலையில் சப்-கலெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் செய்ய பெண் பார்த்து வந்துள்ளனர் பெற்றோர். படித்த பெண்களும், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ். படித்த பெண்களும் மணமகளாய் வர தயாராக இருந்தும், ஒரு மருத்துவரை தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன்.

அவர்களுடைய பெற்றோர் மருத்துவம் படித்த பெண்ணை கடந்த ஓராண்டு காலமாக தேடி வந்தனர். மருத்துவம் படித்த பெண்கள் கிடைத்தும், இவர் கேட்ட நூதன வரதட்சணையை கேட்டு அனைவரும் ஓட்டம் பிடித்தனர்.

கடைசியாக சென்னை நந்தனம் கல்லூரி கணித பேராசிரியரின் மகள் டாக்டர் கிருஷ்ணபாரதியை பெண் பார்த்தனர். அப்போது டாக்டர் கிருஷ்ணபாரதியிடம் மணமகனின் நூதன நிபந்தனையை தயங்கித் தயங்கி கூறினர் சப்-கலெக்டரின் பெற்றோர்.

அதாவது தான் மருத்துவராக உள்ள பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன். தான் மணந்து கொள்ளும் மருத்துவர் வாரத்தில் 2 நாட்கள் தான் பிறந்த ஒட்டங்காடு கிராமத்தில் உள்ள மக்களுக்கும், சுற்றியிருக்கும் கிராம மக்களுக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்பதே இவர் கேட்ட வரதட்சணை.

இதை மகிழ்ச்சியுடன் டாக்டர் கிருஷ்ணபாரதி ஏற்றுக் கொண்டதால் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி இருவருக்கும் திருமணம் நடந்தது.

இக்காலத்திலும் இப்படி ஒருவரா என அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். டெல்டா பகுதி விவசாய குடும்பத்தை சார்ந்த ஒருவர் நேர்மையாய், மக்கள் மீது உண்மையான அன்பு கொண்டவராய் இருப்பவரை பேராவூரணி பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!