அமெரிக்காவில் கொரோனாவுக்கு முதல் பலி… சீனாவில் மேலும் 35 பேர் பலி


கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அமெரிக்காவில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும், சீனாவில் கொரோனா தாக்கி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் 50-க்கும் அதிமான நாடுகளுக்கு பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் நேற்றுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்து 251 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் அடிப்படையில் சீனாவில் இன்று கொரோனா தாக்கி மேலும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 573 பேருக்கு வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 888 ஆகவும், வைரஸ் பரவியுள்ளோர் எண்ணிக்கை 79 ஆயிரத்து 822 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் அமெரிக்காவிலும் பரவியுள்ளது. அந்நாட்டின் வாஷிங்டன் மாகாணத்தை சேர்ந்த 50 வயது நிரம்பிய பெண்ணுக்கு வைரஸ் பரவியது கண்டுபிடிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இன்று அதிகாலை அந்த பெண் சிகிச்சி பலனின்றி உயிரிழந்தார். இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

வாஷிங்டன் பெண் கொரோனாவுக்கு உயிரிழந்ததையடுத்து ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!