ஒரு நூற்றாண்டுக்கு கொரோனா வைரஸ் ஒரு முறைவரும் நோய் – பில் கேட்ஸ்


கொரோனா வைரஸின் தாக்குதலை குறைக்க குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவுமாறு பணக்கார நாடுகளை பில் கேட்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் தலைமை நிர்வாகியுமான பில்கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை ஏற்கனவே 100 மில்லியன் டாலர்களை கொரோனோ வைரஸ் நோய்க்கு எதிராக போராடுவதற்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

பில்கேட்ஸ் இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் தலையங்கத்தில் எழுதி உள்ளதாவது:-

ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை இது போன்ற நோய்க்கிருமி தாக்குதல் இருக்கும். கொரோனா வைரஸ் ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறைவரும் கிருமி நோய் ஆகும். ஆப்பிரிக்கா மற்றும் தெற்காசியாவில் உள்ள நாடுகள் இந்த கொரோனா வைரஸ் நோயை எதிர்க்க இப்போது தயாராக இருப்பதன் மூலம், நாம் உயிர்களைக் காப்பாற்ற முடியும், மேலும் இந்த வைரஸின் உலகளாவிய சுழற்சியை குறைக்கலாம்.

சீனாவில் முதன்முதலில் தோன்றி இப்போது 46 நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா வைரஸ் நோய் மத்திய கிழக்கு சுவாச நோய்க்குறி (MERS) அல்லது கடுமையான கடுமையான சுவாச நோய்க்குறி (SARS) போன்ற நோய்களை விட மிகவும் கொடுமையானது ஆகும்

கொரோனா வைரஸின் தாக்குதலை குறைக்க குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள் தங்கள் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த உதவுமாறு பணக்கார நாடுகளை கேட்டு கொண்டார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!