ரஜினியை பார்த்து யார் என்று கேட்ட வாலிபர் திருட்டு வழக்கில் சிக்கினார்..!


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயம் அடைந்தவர்களை சந்தித்த ரஜினியை பார்த்து யார் என்று கேட்ட வாலிபர் பைக் திருட்டு வழக்கில் கைதாகியுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

ரஜினிகாந்த் துப்பாக்கிச்சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் தூத்துக்குடி சென்றார்.

அப்போது, துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சந்தோஷ்ராஜ் என்பவர் “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சாம்குமார் என்ற இளைஞரின் வீட்டின் முன்பு இருந்த பைக் திருட்டு போனது. இதையொட்டி வடபாகம் போலீசார், சந்தோஷ்ராஜை கைது செய்துள்ளனர். அவருடன் மணி, சரவணன் ஆகியோரும் பைக்கை திருடியது தெரியவந்துள்ளது. அவர்களையும் கைது செய்த போலீசார் பைக்கை பறிமுதல் செய்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!