சின்னத்திரையில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்கள் சாதித்த லிஸ்ட் ஒரு பக்கம் நீ..ண்டு கொண்டே செல்கிறது என்றால், விஜய் டிவியில் இருந்து சினிமாவிற்கு வந்தவர்களின் லிஸ்ட் இன்னொரு பக்கம் நீளும். அந்தளவிற்கு சினிமாவிற்கான எண்ட்ரியாக விஜய் தொலைக்காட்சி இருந்து வருகிறது.
சிவகார்த்திகேயன், டிடி என்கிற திவ்யதர்ஷினி, ரம்யா என்று பட்டியல் பெருசு. ஆனால், அன்றிலிருந்து இன்று வரையில் திரையுலகின் சைலண்ட் மோடில் இருக்கிற அத்தனை ஹீரோக்களுக்கும், பார்ட்டிகளில் பஞ்சாயத்து செய்கிற நடிகர்களுக்கும் நெருக்கமானவராக இருந்து வருபவர் பிரபல தொகுப்பாளினி டிடி என்கிற திவ்யதர்ஷினி.
இந்நிலையில் டிடி அவருடைய இன்ஸ்டா பக்கத்தில், 10 வயது சிறுவன் ஒருவனுடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பெற்றோருடன் அந்த சிறுவன் வந்திருந்தான். உங்களை மிகவும் பிடிக்கும். ஆனா சொல்ல பயமாக இருக்கிறது’ என்றான்.
இந்த அன்பு விலை மதிக்க முடியாதது. அவன் என்னுடைய புகைப்படத்தை மொபைலில் வால்பேப்பராக வைத்திருந்தான். நீ எப்போதும் சிறப்பானவனாகவும், ஜென்டில்மேனாகவும் வளர்வாய். உன் கேர்ள் ப்ரெண்ட் மிகவும் அதிர்ஷ்டசாலி’ என்று குறிப்பிட்டு வாழ்த்தியுள்ளார்.-Source: newstm
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!