மைக்கை கடித்த பாம்பு… தொலைக்காட்சி நிருபருக்கு நேர்ந்த அதிர்ச்சி..!


ஆஸ்திரேலியாவில் தொகுப்பாளர் பணியில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி நிருபரின் மைக்கை கடித்த பாம்பின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.

நைன் நியூஸ் என்பது ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொலைக்காட்சி செய்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சமீபத்தில் பாம்பு பாதுகாப்பு பற்றிய ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது. அதற்காக வித்தியாசமான முயற்சியில் இறங்கியது.

அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிருபரின் தோள்களில் விஷம் இல்லாத சிறிய வகை மலைப்பாம்பை வைத்து அந்நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. அப்போது அந்த பெண் நிருபரின் மைக்கை பாம்பு கடித்தது. சுமார் மூன்று முறை அந்த பாம்பு மைக்கை கடித்தது.

இது குறித்து அந்த பெண் நிருபர் கூறுகையில், ‘நிகழ்ச்சியின் போது பாம்பை கையாள்பவரும், கேமரா மேனும் எனது அருகிலேயே நின்றனர். தேவையான நிகழ்வை பதிவு செய்த பின்னர்தான் நான் நிம்மதி அடைந்தேன். அதன் பின்னர் என்னிடமிருந்து அந்த பாம்பை அகற்றுங்கள் என கூறிவிட்டு ஓடிவிட்டேன்’ என அவர் தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!