அடம்பிடிக்கும் இளம் பெண்.. கணவர் செய்த காரியம்..!


திருநம்பியாக உள்ள தன்னை தனது தந்தை கொலை செய்ய முயற்சிப்பதாக இளம் பெண் காவல்துறையில் புகாரளித்துள்ளார். தந்தை தாக்கியதால் காயமடைந்த அவர் மதுரை இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூத்துக்குடி தருவைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் பொன்மாடசாமி.

இவரது மகள் பொன்மாரி செல்வி (25). இவர் செவிலியர் படிப்பு முடித்துவிட்டு தூத்துக்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார். பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆண் தன்மையுடன் இருப்பதாக கூறிய அவர் ஆண்கள் போன்று தலைமுடி வைத்துக் கொண்டும், ஆண்கள் அணியும் உடைகளையே அணிந்தும் வந்துள்ளார்.

ஆரம்பத்தில் இருந்து மகளின் இச்செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தந்தை பொன்மாடசாமி, அவருக்கு திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார். அதற்கு பொன்மாரி செல்வி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார்.

எனினும், பொன்மாரிச் செல்வியை கட்டாயப்படுத்தி கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. திருமணமான நாள் முதலே பொன்மாரி செல்வி கணவருடன் வாழ விருப்பமில்லாமல் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், அவர்கள் இருவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால், மூன்று மாதத்தில் அந்த குழந்தை இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கணவருடன் வாழ மறுத்து அவர் விவகாரத்து கோரியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண்ணின் தந்தை அவரை வீட்டில் சிறைப்படுத்தி தாக்கியதாக பொன்மாரி செல்வி இப்போது காவல்துறையில் அளித்துள்ள புகாரில் கூறியுள்ளார்.

இதனையடுத்து, வீட்டிலிருந்து தப்பித்து, பொன்மாரி செல்வி மதுரையில் திருங்கைகளுக்காக செயல்படும் பாரதி கண்ணமா அறக்கட்டளை நிறுவனர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரது தந்தை தாக்கியதில் பொன்மாரி செல்விக்கு வலது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனையடுத்து மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது தந்தையால் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும், மேலும் திருநம்பியாக உள்ள தனக்கு படித்ததற்கேற்ற பணியை அரசு வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!