கொரோனா வைரஸ் பரவுவதற்கு இது காரணமாக இருக்கலாம்- சீன விஞ்ஞானிகள்


எறும்பு திண்ணிகளே கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என சீன விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்து உள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 722 பேர் பலியாகி உள்ளனர். 34,546 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சீன விஞ்ஞானிகள் ஒரு குறிப்பிட்ட வகை எறும்பு திண்ணிகள் கொரோனா வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

தென் சீன வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவின் ஆய்வின்படி, ஆபத்தான பாலூட்டிகளிலிருந்து பிரிக்கப்பட்ட மரபணு வரிசை வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 99 சதவீதம் ஒத்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காட்டு விலங்குகளின் 1,000 மெட்டஜெனோம் மாதிரிகள் பகுப்பாய்வு செய்யப்பட்டன, மேலும் எறும்பு திண்ணிகள் பெரும்பாலும் வைரசை பரப்பி இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

சீனாவிலும் வியட்நாமிலும் மனித நுகர்வு மற்றும் மருத்துவ மதிப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானோர் வேட்டையாடப்படுவதால்,எறும்பு திண்ணிகள் அதிகம் கடத்தப்படும் விலங்குகள் ஆகும்.

பல்கலைக்கழகத்தின் தலைவரான லியு யாகோங், இந்த ஆய்வு தொற்றுநோயைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் துணைபுரிகிறது, அத்துடன் காட்டு விலங்குகள் குறித்த கொள்கைகளுக்கு அறிவியல் குறிப்பையும் வழங்குகிறது என கூறினார்.

முன்னதாக, பல சீன வல்லுநர்கள் இந்த வைரஸ் வவ்வால்களிலிருந்து தோன்றியதைக் கண்டுபிடித்தனர், அதன் பிறகு சீனா இதுபோன்ற விலங்குகளை வர்த்தகம் செய்வதற்கு தற்காலிக தடை விதித்து உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!