தாய்- மகளுக்கிடையே பாச போராட்டம்.. காற்றில் கட்டி அணைத்து நெகிழ்ச்சி


சீனாவின் ஹெனான் மாகாணத்திற்கு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான செவிலியர், அவரது மகளை கட்டி அணைத்தால் அவருக்கும் நோய் பரவி விடும் என்ற அச்சத்தால் காற்றிலேயே இருவரும் கட்டி அணைத்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சீனாவின் வுகான் நகரத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய்க்கு 570 பேர் பலியாகிவிட்டனர். இந்த நோய் இதுவர் 25 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 70 பேர் பலியாகிவிட்டனர்.

இந்த நிலையில் சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அந்தந்த நாட்டின் விமான நிலையத்தில் கொரோனா பாதிப்பு இருக்கிறதா என சோதனை செய்யப்படுகிறது.அவ்வாறு இருப்பின் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரிடமிருந்து இந்த நோய் மற்றவர்களுக்கு எளிதாக காற்றின் மூலம் தொற்றிக் கொள்ளும் வாய்ப்பிருப்பதாலேயே பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

சீனாவின் ஹெனான் மாகாண மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் செவிலியர் லியு ஹையனுக்கும் மருத்துவமனைக்கு அவரை காண ஓடி வந்த அவரது 9 வயது மகள் செங் ஷிவெனுக்கும் இடையில் நெகிழ்ச்சியான பாச போராட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் செவிலியரும் அவரது மகளும் தொலை தூரத்தில் நின்றுக் கொண்டு காற்றின் மூலம் கண்ணீருடன் அன்பை பரிமாறிக் கொண்டனர். அப்போது நீண்ட நாட்களாக தாயை காணாமல் இருந்த அந்த குழந்தை அவரை கட்டி அணைக்க விரும்பியது. அவ்வாறு செய்தால் குழந்தைக்கும் நோய் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தால் தூரத்தில் இருந்து இரு கைகளை தாய் நீட்டுகிறார்.

அந்த குழந்தையும் பதிலுக்கு இரு கைகளையும் நீட்டுகிறது. அதாவது காற்றின் மூலம், மானசீகமாக கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொள்கின்றனர். பின்னர் தன் தாய்க்காக கொண்டு வந்த உணவை ஓர் இடத்தில் வைக்கிறார் அந்த சிறுமி, அதை அந்த தாய் எடுத்துக் கொள்கிறார்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!