சாமியார் நித்யானந்தாவின் ஜாமீன் ரத்து – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !


பாலியல் வழக்கில் நீதிமன்றத்தை அவமதித்து ஆஜராகாமல் இருக்கும் நித்யானந்தாவின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

நித்யானந்தா மீதான பாலியல் அத்துமீறல் வழக்கில் அவருக்கு 2010 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் அவர் பலமுறை விசாரணைக்கு ஆஜராகமல் வாய்தா வாங்கிக்கொண்டே இருந்தார். இந்நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென லெனின் கருப்பன் என்பவர் வழக்குத் தொடுத்திருந்தார். இது குறித்து நித்யானந்தாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியது.

அந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது அதிகாரியான காவல் துணை ஆணையர் பி.பால்ராஜ் நித்யானந்தா ஆன்மீக சுற்றுலாவில் இருப்பதால் அவரது சிஷ்யையான குமாரி அர்ச்சனானந்தாவிடம் அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது எனத் தெரிவித்தார். இது சம்மந்தமாக பதிலளித்த அர்ச்சனானந்தா, ‘நித்யானந்தா எங்கிருக்கிறார் என எனக்குத் தெரியாது. ஆனால் போலிஸார் வலுக்கட்டாயமாக இந்த நோட்டீஸை என்னிடம் கொடுத்து சென்றனர்’ எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து இப்போது நீதிபதி மைக்கேல் டி குன்ஹா ‘நித்யானந்தாவுக்கு பாலியல் வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்கிறது. மேலும் அவருக்குப் பிணை வழங்கியவர்களின் ஆவணங்களும் ரத்து செய்யப்படுகிறது.’ என அறிவித்துள்ளார். இதனால் விரைவில் நித்யானந்தா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.-Source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!