முதன் முதலில் கொரோனா உருவானதை கண்டுபிடித்த டாக்டர்.. மிரட்டிய சீன அரசு..!


கொரோனா வைரஸ் உருவானதை டாக்டர் ஒருவர் டிசம்பர் மாதம் தொடக்கத்திலேயே கண்டுபிடித்து அதை மருத்துவர்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால் சீன அரசு இதை வெளியே சொல்ல கூடாது என்று அவரை கடுமையாக மிரட்டி இருக்கிறது.

சீனாவின் மிகவும் கொடூரமான வைரஸாக கொரோனா மாறியுள்ளது. இதனால் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கட்டுப்படுத்த முடியவில்லை என்று சீன அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் பலி எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 20,400 பேர் வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்துள்ளனர். சீனாவில் வுஹன் நகரத்தில் தோன்றிய இந்த வைரஸ் ஒரு மனிதரில் இருந்து இன்னொரு மனிதருக்கு பரவ கூடியது.

இந்த நிலையில் சீனாவை சேர்ந்த லி வென்லியாங் என்ற மருத்துவர் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலை டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டார். சீனாவில் இருக்கும் வுஹன் மத்திய மருத்துவமனையில்தான் லி வென்லியாங் வேலை செய்கிறார். அங்கு அவர் இதயம் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறார். அங்குதான் முதலில் வைரஸ் பரவியது.

இவர் அங்கு பணியாற்றும் போது டிசம்பர் முதல் வாரத்தில், காய்ச்சலுடன் நிறைய பேர் அனுமதி ஆகியுள்ளார்கள். இவர்களில் 8 பேருக்கு ஒரே மாதிரியான வைரஸ் தாக்கி இருக்கிறது. இந்த வைரஸை சோதித்த லி வென்லியாங் அது சார்ஸ் உருவாக காரணமாக இருந்த கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்த்த வைரஸ் போலவே இருந்ததை கண்டுபிடித்துள்ளார். அப்படியே வைரஸ் அது போலதான் இருந்தது.

மீண்டும் சார்ஸ் வந்துவிட்டதா என்று சந்தேகம் அடைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த ஒரே வாரத்தில் லி வென்லியாங் வீட்டு கதவை சீன அதிகாரிகள் தட்டி உள்ளனர். இந்த வைரஸ் குறித்து எதுவும் பேச கூடாது. யாரிடமும் விவாதிக்க கூடாது. சமூக வலைத்தளங்களில் குறிப்பிட கூடாது என்று எச்சரித்துள்ளனர். அதோடு அவரிடம் இது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றிலும் கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள்.


மனதுக்கு விருப்பம் இன்றி கடைசியில் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.இந்த நிலையில்தான் ஜனவரி 10ம் தேதி லி வென்லியாங் காய்ச்சல் வந்து படுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் கொரோனா தாக்கப்பட்ட பெண் ஒருவருக்கு அவர் சிகிச்சை அளித்துள்ளார். அதன்பின் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தன்னுடைய ரத்த மாதிரியை சோதனை செய்தவர் அதிர்ந்து போய் இருக்கிறார்.

இதை வெளியே சொல்ல முயற்சித்த என்னை, சீன அரசு மிரட்டுகிறது. எனக்கும் இந்த வைரஸ் வந்துவிட்டது. இது தொட்டால் பரவும் வைரஸ். சார்ஸ் போலவே அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் இது. ஆனால் சீன அரசு இதை மக்களிடம் இருந்து மறைக்கிறது. சீன மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், இதில் எதோ இருக்கிறது, என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன்பின்தான் சீன அரசு கொரோனா வைரஸ் பரவியதை ஒப்புக்கொண்டுள்ளது. இது தொடர்பாக லி வென்லியாங்கிடம் சீன அரசு மன்னிப்பும், நன்றியும் தெரிவித்துள்ளது. தற்போது லி வென்லியாங்கை சீன மக்கள் ஹீரோ போல கொண்டாடி வருகிறார்கள். லி வென்லியாங் அந்த போஸ்ட் போடவில்லை என்றால் எல்லாம் தவறாக போய் இருக்கும். அரசு பல உண்மைகளை மறைத்து இருக்கும். லி வென்லியாங்க்குதான் நன்றி தெரிவிக்க வேண்டும், என்று மக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதை பார்த்ததும் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் உடனடியாக அவர் மருத்துவர்கள் இருக்கும் வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் அந்த செய்தியை பகிர்ந்துள்ளார். லி வென்லியாங் அளித்த மெடிக்கல் ரிப்போர்ட்களை பார்த்து, சீன மருத்துவர்கள் பலர் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். அவர்களும் இந்த வைரஸ் இப்படித்தான் இருக்கிறது, என்று கூறி இருக்கிறார்கள்.

ஆம், லி வென்லியாங் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். அவருக்கு அந்த வைரஸ் பரவி உள்ளது. இதனால் உடனடியாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்பூவில் அதை போஸ்ட் செய்தார். படுத்த படுக்கையாக அவர் செய்த போஸ்ட் வைரலானது. எனக்கு புதிய வகை வைரஸ் தாக்கியுள்ளது. சீனாவில் எனக்கு தெரிந்து மட்டும் 10 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!