மகனுக்கு அடுத்த மாதம் திருமணம்… சம்பந்திகள் காதலித்து ஓட்டம்..!


அகமதாபாத் அருகே சம்பந்திகள் காதலித்து ஓடியதால் இளம் ஜோடிகளின் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில் வசித்து வரும் துணிக்கடை தொழிலதிபர் மகனுக்கு அதே பகுதியை சேர்ந்த வைரக் கலைஞர் ஒருவரின் பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இருவீட்டார் ஒப்புதலோடு இளம் ஜோடிகளின் நிச்சயதார்த்தம் முடிந்தது.

அடுத்த மாதம் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் துணிக்கடை தொழிலதிபருக்கும், வைரக்கலைஞரின் மனைவிக்கும் காதல் மலர்ந்தது.

இந்த வி‌ஷயம் வீட்டிற்கு தெரியும் முன்னபே ஜோடியாக தலைமறைவாகி விட்டனர். இதனால் இளம் ஜோடிகளின் திருமணமும் நிறுத்தப்பட்டு விட்டது.

துணிக்கடை தொழிலதிபருக்கும், அந்த பெண்ணுக்கு இளம் வயதில் காதல் இருந்துள்ளது. சூழ்நிலை காரணமாக பிரிந்திருக்கிறார்கள். அப்போது தான் அந்த பெண்ணை வைரகலைஞருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

நீண்ட வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்து பழைய காதலை புதுப்பித்து கொண்டுள்ளனர் என தெரிய வந்துள்ளது.

நாட்டாமை படத்தில் அப்பா செந்தில் மகன் கவுண்டமணிக்கு பெண் பார்க்க செல்லும் காட்சியிலும் இதேபோல் ஒரு நகைச்சுவை இடம்பெறும். அதே பாணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!