130 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு..!


சீனாவின் ஜியாங்சி மாகாணத்தின் குவாங்சு நகரில் டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் தொழிலாளர்கள் கட்டிடப்பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த முட்டை படிமங்கள் கிடைத்துள்ளன. உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முட்டை படிமங்கள் இருந்த பாறைகளை எடுத்தனர்.

இந்த முட்டைகள் 130 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை ஆகும். பாறைகளின் நடுவில் இருந்த 30 முட்டைகளை உடைக்காமல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர். இதன் மூலம் இப்பகுதியில் டைனோசர்கள் வாழ்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். முட்டையின் ஓடு 2 மி.மீ. வரை தடிமன் கொண்டுள்ளது.

இந்த முட்டைகளை ஆய்வு செய்வதற்காக தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மேலும் இப்பகுதியில் முட்டைகள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதால் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!