தூக்கிலிட தயார்… நிர்பயா கொலையாளிகளின் கடைசி விருப்பம் என்ன..?


நாட்டையே உலுக்கிய நிர்பயா பலாத்கார கொலை வழக்கின் குற்றவாளிகள் 4 பேரையும் பிப்ரவரி 1-ந் தேதி தூக்கிலிட டெல்லி திகார் சிறை தயாராகி வருகிறது. 4 குற்றவாளிகளின் கடைசி விருப்பங்களை திகார் சிறை நிர்வாகம் கேட்டுள்ளது.

நிர்பயா கொலை வழக்கில் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடுவதற்கான பணிகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டது. ஆனால் அடுத்தடுத்து புதிய புதிய மனுக்களை கொலையாளிகள் தாக்கல் செய்தனர்.

அதேபோல் கருணை மனுக்களையும் அளித்தனர். இவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அத்துடன் பிப்ரவரி 1-ந் தேதி காலை 6 மணிக்கு 4 பேரையும் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவும் பிறப்பித்துள்ளது.

மேலும் 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடாமல் இருப்பதும் அரசியல் பிரச்சனையாகவும் உருவெடுத்துள்ளது. டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 8-ந் தேதி நடைபெறும் நிலையில் இப்பிரச்சனை தேர்தலிலும் எதிரொலிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி 4 குற்றவாளிகளையும் பிப்ரவர் 1-ந் தேதி தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகளை திகார் சிறை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக கூடுதல் ஐஜி ராஜ்குமார் கூறியதாவது:

4 குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு முன்பாக அவர்களது கடைசி விருப்பங்கள் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். 4 பேரின் பதில்களுக்காக காத்திருக்கிறோம். இதுவரை 4 பேரும் எந்த பதிலும் தரவில்லை.

சென்னையில் இளைஞர் காங்கிரஸ் நடத்திய பக்கோடா சுடும் போராட்டம்…!

தங்களது விருப்பங்களை 4 பேரும் தெரிவித்த பின்னர் அது நிறைவேற்றக் கூடியதுதானா என்பதை சிறை நிர்வாகம் ஆலோசித்து முடிவெடுக்கும். தூக்கு தண்டனை கைதிகளின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்ற முடியாது. இவ்வாறு ராஜ்குமார் கூறினார்.

மேலும் கடைசியாக யாரையும் சந்திக்க விரும்புகிறீர்களா? ஏதேனு சொத்துகள் அல்லது உடைமைகளை விரும்பும் நபர்களுக்கு மாற்றித் தர விரும்புகிறீர்களா? என்பது உள்ளிட்ட கேள்விகளும் தூக்கு தண்டனை கைதிகளிடம் கேட்கப்பட்டிருப்பதாகவும் திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி