5 ஆண்டுகளில் அரவிந்த் கெஜ்ரிவால் சொத்து மதிப்பு ரூ.1 கோடி உயர்வு


2015-ம் ஆண்டு தேர்தலில் இருந்ததை விட ரூ.1 கோடியே 30 லட்சம் அதிகம். அதுபோல், ரொக்கப்பணம் ரூ.7 லட்சத்து 69 ஆயிரத்து 736 அதிகரித்துள்ளது.

டெல்லி சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 8-ந் தேதி நடக்கிறது. இதில், புதுடெல்லி தொகுதியில், முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் 3-வது தடவையாக போட்டியிடுகிறார். அவர் நேற்றுமுன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதனுடன் சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். அதில், மொத்த சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 40 லட்சம் என்று கூறியுள்ளார். இது, 2015-ம் ஆண்டு தேர்தலில் இருந்ததை விட ரூ.1 கோடியே 30 லட்சம் அதிகம். அதுபோல், ரொக்கப்பணம் ரூ.7 லட்சத்து 69 ஆயிரத்து 736 அதிகரித்துள்ளது.

அவரது அசையா சொத்துகளின் மதிப்பு, ரூ.85 லட்சம் உயர்ந்துள்ளது. காசியாபாத், குருகிராம் ஆகிய இடங்களில் அவருக்கு அசையா சொத்துகள் உள்ளன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!