என்னை கொலை பண்ண துணிந்து விட்டீர்கள் – ஜெயஸ்ரீயின் அதிர வைக்கும் கடிதம்


என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்கள் அடுத்த இலக்கு மகள் ரேத்வாதானா என தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் நடிகை ஜெயஸ்ரீ, கணவர் ஈஸ்வரிடம் கேட்டுள்ளார்.

தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் ஈஸ்வருக்கு அறிவுரைகளையும் தனது ஏமாற்றத்தையும் ஜெயஸ்ரீ கூறியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் ஈஸ்வர், நீங்கள் உங்கள் பெற்றோர் மற்றும் வழக்கறிஞரின் துணையுடன் இத்தனை துன்பங்களை எனக்கு கொடுத்தீர்கள்.

எனக்கும், எனது மகளுக்கும் நீங்கள் துரோகம் செய்வீர்கள் என ஒரு போதும் நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் எங்களை உண்மையாக விரும்பினீர்கள் என நினைத்தேன். ஆனால் பொய்யான நம்பிக்கைகளை எங்களுக்கு ஏன் அளித்தீர்கள் ஈஸ்வர்?

நினைத்ததில்லை
கடந்த 2013-ஆம் ஆண்டு நீங்கள் தான் என்னை தேடி வந்து திருமணம் செய்து கொள்வதாக கூறினீர்கள். எனது வாழ்வில் துணையாக இருந்தீர்கள். என் மகள் அப்பா என அழைக்கும் படி அவளை பார்த்துக் கொள்ளுங்கள். இது போன்று என் வாழ்வில் மாற்றம் வரும் என ஒரு போதும் நான் நினைத்ததில்லை ஈஸ்வர்.

சிந்திக்கவில்லை
நாம் வாழ்ந்த காலங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆசைகளை பற்றி மட்டுமே நினைத்தீர்கள். என்னையும் என் குழந்தையையும் பற்றி ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை. என்னை ஆள் வைத்து கொள்ளும் நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டீர்கள். கடவுளே ஈஸ்வர் இப்படி செய்வார் என நம்பமுடியவில்லை.

ரூ 2 கோடி வீடு
இன்று நான் உங்களுக்கு மதிப்பில்லாதவளாகிவிட்டேன். பால், மளிகை பொருட்கள், துணி அயர்னிங், இன்டர்நெட் கனெக்ஷன் ஆகியவற்றுக்கு பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டீர்கள். ஆனால் நீங்கள் சூதாடியதால் ஏற்பட்ட லட்சக்கணக்கான கடனை நான்தான் அடைத்தேன். அது போதாததற்கு இந்த வீட்டை ரூ 2 கோடிக்கு நான்தான் வாங்கினேன்.


மறந்துவிட்டீர்கள்
மேலும் உங்கள் தினசரி செலவிற்கும் பணம் கொடுத்துள்ளேன். ஆனால் இன்ரு அதையெல்லாம் மறந்துவிட்டீர்கள். எனக்கும் எனது மகளுக்கும் அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய உங்களுக்கு மனம் வரவில்லை. அடிப்படைத் தேவைகளுக்கான கடனை கூட என்னால் திருப்பித் தர முடியாத நிலையில் உள்ளேன். எனக்கு இப்போது பணிக்கான வாய்ப்புகள் இல்லாததால் என்னால் இவற்றை திருப்பி செலுத்த முடியாது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

இதுதான் கைமாறா
என்னை ஏமாற்றவே மாட்டேன் என எனக்கு வாக்குறுதி அளித்தீர்கள். ஆனால் ஈஎம்ஐயை செலுத்தாததிலிருந்து அனைத்தும் தொடங்கிவிட்டது. என்னை கெட்ட கெட்ட வார்த்தைகளால் அழைத்தீர்கள். இதுதான் எனக்கு நீங்கள் செய்யும் கைமாறா? இப்படித்தான் மனைவியையும் மகளையும் ஏமாற்றுவதா?

ஜீரணிக்கவே முடியவில்லை
இதயமே இல்லாமலும் தந்திரமாகவும் நீங்கள் செயல்பட்டதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. உங்களுடைய அடுத்த இலக்கு மகள் ரேத்வாவா என எனக்கு தெரியவில்லை. உங்கள் காலை பிடித்து கேட்கிறேன். அவளை நிம்மதியாக வாழ விடுங்கள். என் ஏழை தாயிடம் அவள் நிம்மதியாக வாழட்டும். உங்களுக்கு என் உயிர் தானே வேண்டும். எடுத்துக் கொள்ளுங்கள்.

விசுவாசம்
இதுதான் தற்போது மிஞ்சியுள்ளது. உங்களுடைய கஷ்டமான காலங்களில் நான் உடனிருந்ததற்கு உங்களுக்கு விசுவாகமாகவும் ஆதரவாகவும் இருந்ததற்கு இதுதான் உள்ளது. ஆனால் என் மகளை விட்டுவிடுங்கள் என தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ஜெயஸ்ரீ, இந்த உலகில் சிறந்த மாமியார், மாமனாராக நடித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!