அரச குடும்பத்தில் காதல் மனைவிக்கு மரியாதை இல்லை… வெளியேற முடிவு..!


காதல் மனைவி மேகனுக்கு உரிய மரியாதை கிடைக்காத காரணத்தால் அரச குடும்பத்தை விட்டு விலகுவதாக இளவரசர் ஹாரி அறிவித்துள்ளார்.

தனக்கென்று ஒரு வேலையை உருவாக்கிக் கொண்டு அதில் உழைத்து சாப்பிடப்போவதாக அண்மையில் இளவரசர் ஹாரி அறிவித்தார். இது இங்கிலாந்து மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உலகை ஆண்ட இங்கிலாந்து அரச குடும்பம் தான் இங்கிலாந்து அரசின் முதன்மை உறுப்பினர்கள். அரசியின் ஒப்புதலுடன் தான் எந்த பணிகளையும் இங்கிலாந்து அரசு மேற்கொள்கிறது. இங்கிலாந்து அரச குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும் அதிகாரம் பெற்ற இளவரசர் மற்றும் இளவரசி ஆவார்.

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் டயானா தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் ஹாரி, வில்லியம்.இதில் ஹாரி மேகன் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்நிலையில் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதாக ஹாரி மோகன் தம்பதியினர் அண்மையில் அறிவித்தனர். அரச குடும்பத்தில் ஏற்பட்ட மனக்கசப்பால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்நிலையில் சமீபத்தில் லண்டனில் ஹாலிவுட் திரைப்படமான ‘தி லயன் கிங்’ திரையிடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் தலைவர் டாப் இகர் கலந்து கொண்டார்.அப்போது அவரிடம் பேசிக்கொண்டிருந்த ஹாரி, தன் மனைவி மேகன் மீண்டும் பின்னணி குரல் கொடுக்க விரும்புகிறார் என்றும், இதனால் அவருக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தாருங்கள் என்றும் பாப் இகரிடம் கேட்டுக்கொண்டார். அதை பரிசீலிப்பதாக பாப் இகர் தெரிவித்திருந்தார்.

இளவரசர் தன்னிடம் கிண்டல் செய்கிறார் என்று ஆரம்பத்தில் பாப் இகர் நினைத்திருக்கிறார். ஆனால் தற்போது தான் உண்மையிலேயே அவர் மனைவிக்காக வேலை கேட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இளவரசர் ஹாரியை கனடாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹாரி மனகசப்பால் பிரிந்து செல்ல முடிவு செய்திருப்பது இங்கிலாந்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அரச குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இன்று நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அழைத்துள்ளார். இதில் பேசி தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!