அரசியலின் சோதனை காலம் ஆரம்பம்.. ரஜினியை ஆட்டிப்படைக்க போகும் கர்நாடகா..!


கர்நாடகாவில் இந்த வருடம் சட்ட மன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலுக்கு பாஜக சார்பாக ரஜினியை பிரச்சாரம் செய்ய வைக்க அந்த கட்சி முடிவு செய்து இருக்கிறது.

இப்போதே அம்மாநில பாஜக உறுப்பினர்கள் இதற்கான பணிகளில் இறங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் கண்டிப்பாக பாஜக கட்சிக்காக கர்நாடகாவில் பிரச்சாரம் செய்வார் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள்.

ரஜினி தனது அரசியல் அறிவிப்பை வெளியிட்ட அடுத்த நாளே இப்படி ஒரு தகவல் வந்து இருக்கிறது. அரசியலின் சோதனை தற்போது ரஜினியை ஆட்டிப்படைக்க தொடங்கி இருக்கிறது.

பாஜக ஆதரவு
பாஜக மகிழ்ச்சி

ரஜினியின் அரசியல் அறிவிப்பை அவரது ரசிகர்களை விட அதிகம் கொண்டாடியது பாஜக கட்சிதான். முதல் ஆளாக தமிழிசை சவுந்தரராஜன் ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் ரஜினி ஆன்மீக அரசியல் தமிழ்நாட்டில் இருக்கும் நாத்திக அரசியலுக்கு முடிவு கட்டும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்தியா முழுக்க இருக்கும் பாஜக கட்சி அவரது அறிவிப்பை வரவேற்றது.


கர்நாடகாவிலும் வரவேற்பு
கர்நாடகா

கர்நாடகாவிலும் அவரது அறிவிப்பிற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. கர்நாடக முன்னாள் அமைச்சரும், பாஜக முக்கிய நிர்வாகியுமான சி. டி. ரவி இது குறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ”பாஜக கட்சி எப்போதும் ரஜினியுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறது. அவரை நாங்கள் எப்போதும் ஆதரித்து வருகிறோம். நாங்கள் அரசியலில் யாரையும் ஒதுக்கி வைக்க விரும்பவில்லை. எங்களுடன் சேர விரும்பும் அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் கர்நாடக தேர்தலில் ரஜினியை பிரச்சாரம் செய்ய வைக்கவும் திட்டமிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

கர்நாடகா பிடிக்கும்
மண்ணின் மைந்தர்

இதேபோல் ரஜினியின் சகோதரர் சத்யா நாராயண ராவ் கோவிந்த் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் ”ரஜினிக்கு எப்போது தன்னுடைய பிறந்த மாநிலத்திற்கு நல்லது செய்ய வேண்டும் என்று ஆசை. தமிழக அரசியலுக்குள் வருவதன் மூலம் அவர் தமிழ்நாட்டிற்கும் நல்லது செய்ய முடியும், கர்நாடகாவிற்கும் நல்லது செய்ய முடியும்” என்று குறியுள்ளார்.


முடிவெடுப்பார்
முடிவு செய்வார்

அதேபோல் பாஜகவிற்காக ரஜினி பிரச்சாரம் செய்வாரா என்பது குறித்தும் அவர் பேசினார். அதில் ”ரஜினி இப்போதுதான் அரசியல் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். எனவே அவர் இதுகுறித்து புரிந்து கொள்ள சில நாள் ஆகும். அதுவரை அவர் பிரச்சாரம் செய்வாரா என்று சொல்ல முடியாது. இதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.- Source: tamil.oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!