தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார்


தமிழக முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் காலமானார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியைச் சேர்ந்தவர் பி.எச்.பாண்டியன் (வயது 74). அதிமுகவைச் சேர்ந்த இவர் 1985 முதல் 1989 வரை தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகராக இருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பி.எச்.பாண்டியன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!