கையை இழுத்து பிடித்த பெண்…. போப் ஆண்டவரின் அதிர்ச்சி வீடியோ..!


பொது இடங்களில் சில நேரங்களில் நம்மை அறியாமல் நாம் கோபத்தை காட்டி விடுவது உண்டு. இதற்கு போப் ஆண்டவரும் விதிவிலக்கு அல்ல என்று கூறும்படியாக ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது.

நேற்று முன்தினம் வாடிகனில் உள்ள புனித பீட்டர் சதுக்கத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ், பார்வையாளர்களை சந்தித்தார். எல்லோருக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டே வந்தார். குழந்தைகளை தொட்டு ஆசி வழங்கினார்.

அப்போது ஒரு பெண், அவருடைய வலது கையைப்பற்றிக்கொண்டு தன் பக்கமாக இழுத்தார். அவரிடம் இருந்து போப் ஆண்டவரால் கையை விடுவித்துக்கொள்ள முடியவில்லை. அதைத் தொடர்ந்து அவர் லேசான கோபத்துடன் தனது இடது கையால் அந்தப் பெண்ணின் கையை 2 முறை அடித்து, தன் கையை விடுவித்துக்கொண்டு நகர்ந்து சென்றார்.

இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் புத்தாண்டு வழிபாட்டுக்கு முன்னதாக தனது செயலுக்காக போப் ஆண்டவர் பிரான்சிஸ் தனிப்பட்ட முறையில் வருத்தம் தெரிவித்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “நாம் பல நேரங்களில் பொறுமை இழந்து விடுகிறோம். நானும் அப்படி பொறுமை இழந்து இருக்கிறேன். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்துவிட்ட மோசமான சம்பவத்துக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கூறினார்.

அதே நேரத்தில் போப் ஆண்டவரின் செயலை நியாயப்படுத்தி பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!