இப்படி வேலை செய்வதும் ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பதும் ஒன்று தானாம்.. எச்சரிக்கை பதிவு


ஒரே இடத்தில் ஆறு மணி நேரம் தொடர்ந்து உட்கார்ந்திருப்பது ஒரு பாக்கெட் சிகரெட் குடிப்பதற்கு சமமானது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து இப்படி ஒரே இடத்தில் அமர்ந்திருந்தால், இதயத்தில் கொழுப்பின் அளவு அதிகரிக்குமாம். மேலும் டைப்-2 நீரிழிவு நோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளதாம்.

ஆனால் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ள ஒரு நல்ல விஷயம் என்னவெனில், சிறிய அளவிலான உடல் உழைப்பு கூட, இந்த பிரச்சனைகளிலிருந்து மனிதர்களை காப்பாற்றும் என்பதுதான். எனவே நீங்கள் அதிக நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்ப்பவர் என்றால், கீழ்காணும் சில விஷயங்களை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

1.ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒருமுறை, உங்கள் சீட்டிலிருந்து இரண்டு நிமிடங்களுக்கு எழுந்து நில்லுங்கள்.

2.எப்போதெல்லாம் சிறிய அளவிலான மீட்டிங் நடக்கிறதோ, அப்போதெல்லாம் நின்றுகொண்டே அதில் கலந்து கொள்ளுங்கள்.


3.நீளமான மின்னஞ்சல்கள் வரும் போது, அவற்றை நடந்து கொண்டே படிக்க முயற்சி செய்யுங்கள்.

4. உங்கள் வேலையிடத்தில் உட்கார்ந்தவாறே, சிறிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

5.வேலை நேரத்தின் போது, சக பணியாளர்களுடன் இணைந்து சிறிய விளையாட்டுகள், எளிய உடற்பயிற்சிகள் மேற்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

6.குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு நடந்து செல்லுங்கள். எல்லா இடத்திற்கும் வாகனங்களை எடுத்துச் செல்லாதீர்கள்.

7.அலுவலகத்தில் மட்டுமாவது படிக்கட்டுகளை பயன்படுத்துங்கள். உங்கள் அலுவலகத்தில் அதிக மாடிகள் இருந்தால், இரண்டு மாடிகளுக்கு மட்டும் படிக்கட்டில் ஏறிவிட்டு, அதன் பின்னர் லிப்ட்டை பயன்படுத்துங்கள்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!