ரூ.220 கோடி பரிசு விழுந்ததாக துள்ளிக்குதித்த பெண் பத்திரிகையாளர்.. பின் நடந்தது என்ன..?


ஸ்பெயின் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரிந்து வரும் நடாலியா எஸ்குடெரோ என்பவர், நேரலையில் கிறிஸ்துமஸ் லாட்டரி பரிசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். முதல் பரிசு சுமார் 220 கோடி ஆகும். இந்நிலையில், தனக்கு பரிசு விழுந்ததாக நினைத்துக்கொண்டு நேரலையில் துள்ளிக்குதிக்க தொடங்கினார்.

இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் அனைவருமே ஆச்சர்யத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். ‘நாளையிலிருந்து நான் வேலைக்கு வர மாட்டேன்’ எனவும் தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் அவர் தன்னுடைய லாட்டரி டிக்கெட்டை சோதனை செய்தபோது, வெறும் 5,000 யூரோக்கள் ( இந்திய மதிப்பில் ரூ.40,000) மட்டுமே வென்றிருப்பது தெரிய வந்தது.

உடனே அவர் மீண்டும் நேரலையில் தோன்றி பார்வையாளார்களிடம் மன்னிப்பு கோரினார்.

மேலும், அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ஒரு பத்திரிகையாளராக 25 ஆண்டுகளாக ‘பெருமையுடன் மற்றும் கடுமையான’ பணிகளை செய்து வருவதாக பதிவிட்டார். இந்த வீடியோ காட்சி உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக ஒரு ‘கடினமான’ காலக்கட்டத்தை தான் அனுபவித்து வருவதாகவும், விடுமுறை திட்டமிடப்பட்டிருப்பதால் வேலைக்கு நேரம் ஒதுக்குவதாகவும் குறிப்பிட்டார்.
-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!