இந்தியாவில் திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் – உ.பி.யில் உருவாகிறது


இந்தியாவிலேயே முதல் முறையாக உத்திரபிரதேசத்தில் மூன்றாம் பாலினத்தவருக்காக பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது.

இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் கல்வி உள்பட பல்வேறு துறைகளில் முன்னேற்றம் அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஆனாலும், அனைத்து தடைகளையும் தாண்டி அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சாதித்த வண்ணம் உள்ளனர்.

கல்வி துறையை பொருத்தவரை மூன்றாம் பாலினத்தவர்களுக்கென்று தனியாக பள்ளிகளோ, கல்லூரிகளோ, பல்கலைக்கழகங்களோ இந்தியாவில் இதுவரை உருவாக்கப்படவில்லை. இதனால் அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துவருகிறது.

இந்நிலையில், நாட்டிலேயே முதல் முறையாக உத்தர பிரதேசம் மாநிலம் குஷிநகரில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கென பிரத்யேகமாக ஒரு பல்கலைக்கழகமே தொடங்கப்பட உள்ளது.

அகில இந்திய மூன்றாம் பாலினத்தவர்களுக்கான கல்வி அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் முதல் வகுப்பிலிருந்து முதுகலை பட்டப்படிப்பு வரை வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பி.எச்.டி. எனப்படும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வு படிப்புகளும் இந்த பல்கலைக்கழக்கத்தில் பயிலலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினவர்த்தவர்களால் வளர்க்கப்பட்ட இரண்டு குழந்தைகள் வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதி இங்கு அனுமதிக்கப்படுவார்கள். பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் இதர வகுப்புகளும் தொடங்கப்படும் என இந்த அறக்கட்டளையின் தலைவர் கிருஷ்ண மோகன் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!