கள்ளக்காதலனை கை விட மறுத்த 18 வயது மகள்… தாயார் செய்த பயங்கரம்..!


மகளின் கள்ளக்காதலை கடத்தி கொலை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

வாலிபர் உடல் மீட்பு

மும்பை முல்லுண்டு பகுதியை சேர்ந்தவர் பாபு(வயது32). இவர் கடந்த 20-ந்தேதி வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து பாபுவின் குடும்பத்தினர் முல்லுண்டு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர்.

இந்தநிலையில் தானே மாவட்டம் சகாப்பூா் பகுதியில் பாபுவின் உடல் மீட்கப்பட்டது. பாபுவின் உடலை அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் பாபு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

கள்ளக்காதல் விவகாரம்

கொலை செய்யப்பட்ட பாபுவிற்கு 18 வயது இளம்பெண் ஒருவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதை இளம்பெண்ணின் தாய் கீதா(48) கண்டித்து உள்ளார். எனினும் பாபு கள்ளக்காதலை கைவிடவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கீதா சம்பவத்தன்று 4 பேருடன் சேர்ந்து குடிபோதையில் இருந்த பாபுவை ஆட்டோவில் கடத்தி உள்ளார். பின்னர் ஆட்டோவில் வைத்து பாபுவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, உடலை சகாப்பூர் பகுதியில் வீசிவிட்டு தப்பி விட்டனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கீதாவை கைது செய்தனர். மேலும் கொலையில் தொடர்புடைய 4 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!