யாரோடு டேட் பண்ண நினைக்குறீங்க ? பிக் பாஸ் கவின் ஓபன் டாக்!


பிக் பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த 105 நாட்களாக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. மற்ற சீசன்களை காட்டிலும் பிக் பாஸ் சீசன் 3 மிகவும் சிறப்பாக இருந்ததாகப் பலரும் கூறி வருகின்றனர். குறிப்பாக இந்த சீசனில் காதல், சண்டை, நட்பு என பார்வையாளர்களைக் கவர்ந்தது. இந்த நிகழ்ச்சி முடிந்ததாலும் போட்டியாளர்கள் சாகப்போட்டியாளர்களின் வீடுகளுக்கு செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என ஜாலியாக உள்ளனர்.

குறிப்பாக இந்த நிகழ்ச்சியால் கவினுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. லாஸ்லியாவுடனான காதல், சண்டை, அழுகை என பல பரிமாணங்களைக் காண்பித்த கவினுக்கு வெளியில் வந்தும் அதே அளவிற்கு ரசிகர்களின் அன்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் பிரபல இணையதள ஊடகம் கவினுக்கு Most Popular person on television on Male விருது வழங்கியது.அப்போது கவினிடம் யாரோடு டேட் பண்ண நினைக்குறீங்க ? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கவின், ‘செல்வராகவன் சார். அவர் படங்கள்லாம் பார்த்துருக்கேன். அவர் பெர்சனலா எப்படி இருப்பாங்கனு தெரிஞ்சுக்கணும். அவர்கூட பேசும் போது அவருடைய எண்ணங்கள் எப்படிப்பட்டதுன்னு தெரியும்’ என்றார்.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!