நல்லாதான் இருந்தாரு.. திடீர்னு இறந்துட்டாரு.. பதற வைத்த மனைவி சிக்கியது எப்படி..?


“ராத்திரிகளில் தூங்க விடறதே இல்லை.. தினமும் சண்டைதான்.. வீட்டில சாமிக்கு மாலை போட்டிருக்கோம்.. என் பையனை கறி சாப்பிட சொல்லி அடிச்சாரு.. அந்த கோபத்துலதான் கம்பால அடிச்சே கொன்னுட்டேன்” என்று கணவனை கொன்ற தனலட்சுமி வாக்குமூலம் தந்துள்ளார்.

சிவகாசி அருகே உள்ள கே.மடத்துபட்டியை சேர்ந்தவர் முத்துராஜ்.. இவரது மனைவி தனலட்சுமி.. 40 வயதாகிறது.. இவர்களது மகன் அரவிந்த்.

முத்துராஜ் அங்குள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு தனலட்சுமி, முத்துராஜின் தாய்மாமா அழகர் ராமானுஜத்துக்கு போன் செய்தார்.. ‘நல்லாதான் இருந்தாரு.. திடீர்னு இறந்துட்டாரு” என்று கதறி அழுதார் தனலட்சுமி.

இதனால் அதிர்ந்து போன தாய்மாமா, ஒரு பெரிய மாலையை வாங்கி கொண்டு, முத்துராஜின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் யாருமே இல்லை.. தனலட்சுமி யாருக்குமே இந்த தகவலை சொல்லவும் இல்லை.. முத்துராஜ் சடலம் மட்டும் நடுவீட்டில் கிடந்தது.. உடம்பெல்லாம் ரத்த காயங்கள் இருந்தன.. முக்கியமாக தனலட்சுமியை அங்கு காணோம்.. இதையெல்லாம் பார்த்து சந்தேகம் அடைந்த தாய்மாமன் அழகர்ராமானுஜம் உடனடியாக வெம்பக்கோட்டை போலீசாருக்கு தகவல் தந்தார்.

அதன் பேரில் போலீசார் மோப்ப நாய் ராக்கியுடன் விரைந்துவந்து சோதனையில் இறங்கினர்.. முதல் தேடலே தனலட்சுமிதான்.. அதே ஊரில் ஒரு வீட்டிற்குள் பதுங்கி இருந்த தனலெட்சுமி மற்றும் அவருடைய தம்பி சஞ்சீவியையும் சுற்றி வளைத்து பிடித்தனர். இவர்களை தவிர, தனலட்சுமியின் தந்தை கோபால்சாமி, தாய் விஜயலட்சுமி, மகன் அரவிந்த்தையும் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.

அப்போது தனலட்சுமி போலீசாரிடம் சொல்லும்போது,”தினமும் குடிச்சிட்டு வர்றாரு.. நைட் முழுக்க தகராறுதான்.. என் சொந்தக்காரர் ஒருத்தர் சாமிக்கு மாலை போட்டிருக்கிறார்.. அதனால வீட்டில் எல்லாரும் விரதம் இருக்கோம்.. நாங்கள் நான்-வெஜ் சாப்பிடுவது இல்லை.. ஆனால், என் கணவர் கையில் சிக்கன் வாங்கிட்டு வந்து, என் பையனை சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தினார்.

அவன் சாப்பிட மாட்டேன்னு சொல்லவும், குடிபோதையில் என் பையனை அடிச்சிட்டார்.. இதை நானும் என் தம்பி சஞ்சீவியும் தட்டிக் கேட்டோம்.. ஒருகட்டத்தில், அவரை நாங்கள் கம்பால் அடித்தே கொலை செய்தோம்” என்றார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தனலட்சுமி, சஞ்சீவியை கைது செய்தனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!