ஹைதராபாத் என்கவுன்ட்டரில் பலியான சென்னகேசவலுவின் மனைவி பற்றி வெளி வந்த பகீர் தகவல்!


ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட சென்னகேசவலுவின் மனைவிக்கு 13 வயதுதான் ஆகிறதாம்.

தெலுங்கானாவில் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவரை கடந்த 27-ஆம் தேதி இரவு 4 பேர் கொண்ட கும்பல் கொடூரமான முறையில் பலாத்காரம் செய்துவிட்டு அவரை பெட்ரோல் ஊற்றி எரித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக லாரி டிரைவர்கள் மற்றும் கிளீனர்களான முகமது ஆரீப், ஜொல்லு சிவா, ஜொல்லு நவீன், சென்னகேசவலு உள்ளிட்டோர் சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

இந்த நிலையில் கொலையை எப்படி செய்தார்கள் என்பதை நடித்து காட்டுவதற்காக 4 பேரும் போலீஸ் பாதுகாப்புடன் சம்பவ இடத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது 4 பேரும் போலீஸாரை தாக்கிவிட்டு தப்ப முயற்சித்தனர்.


அப்போது அவர்களை போலீஸார் சுட்டுக் கொன்றனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இறந்த 4 பேரின் குடும்பத்தினரும் என்கவுன்ட்டர் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் 4 குடும்பத்தினருக்கு தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இறந்த சென்னகேசவலுவுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்னர்தான் திருமணம் நடந்ததாம். இவரது மனைவிக்கு 13 வயதுதான் ஆகிறதாம். தற்போது இவர் கர்ப்பமாக இருக்கிறார். கணவருக்கு 28 வயது.

7-ஆம் வகுப்பு படித்த போதே திருமணம் செய்து கொண்ட இவர், இறந்த ஒரு பெண்ணிற்காக போலீஸ்காரர்கள் 4 பேரை சுட்டுக் கொன்றுவிட்டனர் என கூறுவதுடன் இறந்த பெண் மீது அவதூறும் கூறி வருகிறார். இந்த பெண் 2006-இல் பிறந்தார்.

இந்த பெண் பெற்றோரையும் இழந்து, கணவரையும் இழந்து தவித்து வருவதால் இவர் தற்போது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். இந்த தகவலை அறிந்த மாவட்ட குழந்தைகள் நலக் காப்பகத்தினர், அந்த பெண்ணை தங்களிடம் ஒரு வாரத்தில் ஒப்படைக்க வேண்டும் என சென்னகேசவலுவின் பெற்றோருக்கு உத்தரவிட்டுள்ளனர்.-Source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!