மதுபானம் குடித்து விட்டு உறவில் ஈடுபட்டால் என்ன நடக்கும்..?


தாம்பத்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது.

செக்ஸ் என்பது ஆண்-பெண் இருவரின் மொத்த மகிழ்ச்சியான அனுபவம். உடல் அளவில் பார்த்தால் டெஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அளவைப் பொருத்தே அமைகிறது. இது ஆண்-பெண் இருவருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில் சுரக்கிறது. போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாகச் சுரக்க செய்யும் தன்மை கொண்டவை.

அதேபோல் செக்ஸ் நடவடிக்கைகளில் போதைப்பொருள்கள் சிலநேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் தன் நிலையை மறந்து விடத் தொடங்குகிறது.


போதைப் பொருள்கள் உணர்ச்சியை தூண்டுவது போல் தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாது. மேலும் உச்சக்கட்டத்தை பெறவும் உதவாது. சில சமயங்களில் உச்சகட்ட நிலை ஏற்படுவதையே தடுத்து விடும் ஆற்றல் படைத்தவை.

சிகரெட் பிடிக்கும் ஆண்களுக்கு அதிக வேகத்தில் செக்ஸ் செயல்பாடுகளில் ஈடுபட முடிவதில்லை. அதேபோல் சிகரெட் பிடிக்கும் பெண்களுக்கு உறவின் போது உறுப்பில் வழுவழுப்பு தன்மையை ஏற்படுத்தும் திரவத்தின் அளவு குறைந்து வறட்சி தன்னை ஏற்படுகிறது. இதற்கு சிகரெட்டில் உள்ள நிகோடின் தான் காரணம்.

மன உளைச்சலைக் குறைக்கும் மருந்துகளுக்கு கூட இந்த தன்மை உள்ளது. இப்படிப் பட்ட மருந்துகளை உள்கொள்ளும் போது செக்ஸ் உணர்வு குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்களால் சொல்லப்படுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!