டிரம்ப் பதவி பறி போய்விடுமா? அமெரிக்காவில் என்னதான் நடக்கிறது?


அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கக் கோரும் முதல் தீர்மானம் நிறைவேறியது.

டிரம்ப்பை பதவி நீக்கக்கோரும் தீர்மானத்திற்கு ஆதரவாக 230க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர். சொந்த அரசியல் ஆதாயத்துக்காக அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் டிரம்ப்புக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பாராளுமன்ற நடவடிக்கைகளை தடுத்தார் என்ற என்ற டிரம்புக்கு எதிரான 2வது தீர்மானமும் நிறைவேறியது.

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செனட் சபையில் விவாதத்திற்கு அனுப்பப்படும். விசாரணைக்கு பின் செனட் சபையில் வாக்கெடுப்பு நடக்கும் என்பதால் டிரம்ப் பதவிக்கு உடனடியாக சிக்கல் இல்லை.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!