மனைவி கோபித்து சென்றதால் போலீஸ்காரர் எடுத்த விபரீத முடிவு..!


அரூர் அருகே மனைவி கோபித்து சென்றதால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த பையர்நாய்க்கன்பட்டியை சேர்ந்தவர் நீலகண்டன் (வயது 39). இவருடைய மனைவி சந்திரலேகா. இவர்களுக்கு, 4 மகள்கள் உள்ளனர். நீலகண்டன் கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் நீலகண்டன் கடந்த 4 மாதமாக பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சந்திரலேகா கணவரிடம் கோபித்து கொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப் பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்த நிலையில், மனைவி கோபித்து கொண்டு சென்றதால் மனமுடைந்த நீலகண்டன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் கோட்டப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று நீலகண்டனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக கோட்டப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!