ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்களை ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க சசிகலா அனுமதி..!


மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வரும் சசிகலா, தன்னிடம் உள்ள ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை 15 நாட்களுக்குள் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யும்படி, ஆணையம் கடந்த 22-ந் தேதி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பியது.


தபால் மூலம் அனுப்பப்பட்ட இந்த சம்மனை சசிகலா சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் கையெழுத்து போட்டு பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக இருந்துவரும் ராஜா செந்தூர்பாண்டியன் மூலம் தன்னிடம் உள்ள மருத்துவ ஆவணங்களை தாக்கல் செய்ய அங்கீகார கடிதத்தை (வக்காலத்து) அளித்துள்ளார்.

இதன்மூலம் ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான மருத்துவ ஆவணங்களை சசிகலா சார்பில் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் விசாரணை ஆணையத்தில் விரைவில் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.- Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!