சன்னிலியோன் வீடியோவுக்கு கணவரோட ரியாக்ஷன பாருங்க.. தீயாய் பரவும் வீடியோ!


பாலிவுட் நடிகை சன்னி லியோன் பதிவேற்றிய கிஸ் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

பாலிவுட்டின் அழகிய நடிகைகளில் ஒருவர் சன்னி லியோன். சினிமாவில் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார் சன்னி லியோன்.

சன்னி லியோனுக்கு பாலிவுட் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் என மற்ற மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர். சன்னி லியோன், சிறப்பான டான்ஸர்.. நல்ல நடிகை.. இவற்றையெல்லாம் தாண்டி நல்ல தாயாகவும் நல்ல மனைவியாகவும் இருந்து வருகிறார்.

சன்னி லியோனுக்கு நிஷா வெபர் கவுர், நோவா சிங் வெபர், அஷர் சிங் வெபர் என மூன்று குழந்தைகள் உள்ளனர். படங்கள், பாடல்களை தாண்டி நடிகை சன்னி லியோன் சமூக வலைதளங்களில் வெளியிடும் போட்டோக்களால் எப்போதும் தலைப்புச் செய்தியாகவே இருந்து வருகிறார்.


நாள்தோறும் அவர் மேற்கொள்ளும் பணிகள் குறித்து வெளியிடும் போட்டோக்களால் அவரது ரசிகர்களை எப்போதும் சூடாகவே வைத்திருக்கிறார். மேலும் அவ்வப்பது கிக்கான கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைக்கிறார் சன்னி லியோன்.

அந்த வகையில் சன்னி லியோன் நேற்று படத்தின் சிறப்பு காட்சிக்கு சென்றிருந்தார். அப்போது வெள்ளை நிற டாப் அணிந்து அதற்கு மேட்சாக நீல நிற ஜீன்ஸ் பேண்ட்டும் அதற்கு மேட்சான ஜாக்கெட்டும் அணிந்திருந்தார் சன்னி.

View this post on Instagram

Good night!!

A post shared by Sunny Leone (@sunnyleone) on


மேலும் வெள்ளை நிற சாக்ஸ் அணிந்து ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார் சன்னி லியோன். தொடர்ந்து செல்பி வீடியோ ஒன்றையும் எடுத்தார் சன்னி லியோன், அதில் செக்ஸி லுக்கில் நச்சென முத்தம் கொடுத்துள்ளார்.

அந்த வீடியோவை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட் நைட் என வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ வைரலாகி வருகிறார்.

அந்த வீடியோவை இதுவரை 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். சன்னியின் அந்த வீடியோவை பார்த்த அவரது கணவர் டேனியல் வெபர் உடனடியாக கமென்ட் பதிவிட்டுள்ளார். அதில் ஹார்ட்- ஐஸ் ஈமோஜிகளை பதிவிட்டிருக்கிறார்.-Source: filmibeat

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!