உங்களுக்கு வெட்கமே இல்லையா? சூப்பர் ஸ்டார் மகளை வறுத்தெடுத்த ரசிகர்கள்


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் மகள் ஐரா அமெரிக்காவில் உள்ளார். அவர் கேமராவுக்கு பின்னால் இருக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் ஐரா தொடர்ந்து போட்டோஷூட்டுகளில் கலந்து கொண்டு புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவருக்கு நடிகையாகும் ஆசை வந்துவிட்டதாக பாலிவுட்டில் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐரா ஒரு போட்டோஷூட்டில் கலந்து கொண்டார். அப்பொழுது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு என்ன ஒரு வியூ என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது, போஸ் கொடுத்த உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை. ஆனால் பார்க்கும் எங்களுக்கு உங்க அப்பா ஆமீர் கானை நினைத்து சங்கடமாக இருக்கிறது. அப்பாவும் இதை பார்ப்பாரே என்கிற யோசனை கூட இல்லையா?. புகைப்படமே அசிங்கமாக உள்ளது இதில் நீங்கள் போட்டுள்ள கேப்ஷன் அதை விட கேவலமாக இருக்கிறது.


நடிகையாகும் ஆசை இருந்தால் நடிப்புத் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள். ஆடை குறைப்பும், மேனியை காட்டுவதும் நடிப்பு அல்ல. இதை இந்த பாலிவுட்காரர்கள் எப்பொழுது தான் புரிந்து கொள்ளப் போகிறார்களோ.

அது ஏன் பாலிவுட் பிரபலங்களின் பிள்ளைகள் பெரும்பாலும் பெயருக்கு உடை அணிகிறீர்கள். உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

முன்னதாக ஐரா தன் தந்தை மீது அமர்ந்திருந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் அவரை விளாசினார்கள். ஐரா அடிக்கடி விமர்சனத்திற்குள்ளாகி வருகிறார்.-Source: samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!