இருட்டு அறையில் முரட்டு குத்து – 2… ஹீரோவாகும் பட இயக்குனர்..!


இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், அதன் 2-ம் பாகத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த இந்த படம், இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், சந்தோஷ் பி ஜெயக்குமார் மீண்டும் ஒரு அடல்ட் காமெடி ஹாரர் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து 2 என பெயரிடப்பட்டுள்ளது. இருப்பினும் இது அந்த படத்தின் தொடர்ச்சியாக இருக்காது என்றும் இது வேறு கதை எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் மூலம் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார். நடிகர் சாம்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இப்படத்தை வரும் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!