110 சவரன் நகைகள்… மாமனாருடன் சேர்ந்து சிக்கிய மருமகள்! கன்னியாகுமரியில் அதிர்ச்சி!


கன்னியாகுமரியில் வீட்டில் புதைத்து வைத்திருந்த 110 சவரன் நகைகளை மாமனாருடன் சேர்ந்து மருமகளே திருடிவிட்டு கொள்ளை போனதாக நாடகமாடியது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜய்யன் இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்களும் உள்ளனர். இவர் அதே பகுதியில் துணிக்கடை வியாபாரம் செய்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மனைவியும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மூத்த மகனின் குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில் வீட்டில் மூத்த மருமகள் மற்றும் ராஜய்யன் ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர். இதையடுத்து நேற்று கடன் முடித்து விட்டு குடும்பத்துடன் வீடு திரும்பியதும் வீட்டில் மூத்த மருமகள் பிரீத்தா முகத்தில் துணி சுற்றப்பட்டு கைகள் கட்டிய நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து அதிர்ந்து போய் அவரிடம் கேட்டபோது திருடர்கள் மிளகாய் பொடி தூவி விட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனே அருகில் இருந்தவர்களை அழைத்து பேசியுள்ளனர். இந்நிலையில் திருட்டு சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.அந்த புகாரில் வீட்டில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 110 சவரன் நகைகளை கொள்ளையர்கள் திருடி விட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் விசாரணையில் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமாக விசாரணையில் பதில் அழித்துள்ளனர்.

இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் அனைவரையும் தனித்தனியே விசாரித்துள்ளனர். இதையடுத்து வீட்டில் இருந்தது 110 சவரன் நகைகள் கிடையாது வெறும் 60 சவரன் மட்டுமே நகைகள் வீட்டில் புதைத்ததாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனது இளைய மகளின் திருமணத்திற்காக 50 சவரன் நகைகளை விற்று திருமணம் முடித்து வைத்ததாக தெரிவித்துள்ளனர். பின்னர் மூத்த மருமகள் பிரீத்தா நகைகளை வீட்டில் யாருக்கும் தெரியாமல் எடுத்து செலவு செய்து விட்டதாகவும், அதற்கு உடந்தையாக தனது மாமனார் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மூத்த மருமகள் நகைகளை திருடி விட்டு கொள்ளை நாடகமாடியதாக காவல்துறையினரின் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். இந்நிலையில் அதற்கு உடந்தையாக இருந்த அவரது மாமனார் ராஜய்யன் மற்றும் ப்ரீத்தா ஆகிய இருவரையும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

வீட்டில் இருந்தவர்கள் யாரும் அவர்கள் மீது புகார் அளிக்காத நிலையில் அவர்களை கைது செய்யாமல் காவல்துறையினர் எச்சரித்துவிட்டு மட்டும் சென்றுள்ளனர். சொந்த வீட்டிலேயே திருடிவிட்டு கொள்ளை நாடகமாடிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!