மும்பை கமலா மில்ஸ் வளாகத்தில் திடீர் தீ விபத்து: 14 பேர் தீயில் கருகி பலி..!


மும்பையில் லோயர் பேரல் பகுதியில் அமைந்துள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ 4 அடுக்குகள் கொண்ட கட்டிடத்தின் 3வது தளத்தில் பரவியது. இதில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சம்பவ இடத்திற்கு பல்வேறு தீயணைப்பு வாகனங்கள், தண்ணீர் டேங்குகள், அவசரகால ஆம்புலன்ஸ் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உடனடியாக சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!