20வது மாடியிலிருந்து நிர்வாணமாக விழுந்த மாடல் அழகி.. மீண்டும் விசாரிக்கும் போலீஸ்


2017ம் ஆண்டு மலேசியாவில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டிலிருந்து நிர்வாண நிலையில் ஒரு மாடல் அழகி கீழே விழுந்து உயிரிழந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தற்போது போலீஸார் வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளனர்.

அவர் போதை மருந்து உட்கொண்ட நிலையிலும், குரூப் செக்ஸில் ஈடுபட்டிருந்தபோதும் மேலேயிருந்து கீழே விழுந்ததாக அப்போது பேசப்பட்டது. குரூப் செக்ஸின்போது அவர் தவறி போய் விழுந்தாரா அல்லது தள்ளி விட்டு யாரேனும் கொன்றனரா என்பது அப்போது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் தற்போது இதை போலீஸார் கொலை வழக்காக விசாரிக்க ஆரம்பித்துள்ளனராம். சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் இவானா ஸ்மித். 18 வயதாகிறது. டச்சு நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி. கோலாலம்பூரில் உள்ள காண்டமோனியம் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார்.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் இவர் பார்ட்டி கொண்டாடினார். 20வது மாடியில் பார்ட்டி நடந்தது. பலரும் கலந்து கொண்டனர். அப்போது வகை தொகையே இல்லாமல் போதை மருந்து உட்கொண்டனர். குரூப் செக்ஸும் களை கட்டியது. இவரது கணவர் அமெரிக்கர் ஆவார். இருவருமே போதை மருந்தின் தாக்கத்தில் இருந்தனர்.வந்திருந்த கெஸ்ட்டுகளுடன் இவர்கள் குரூப் செக்ஸ் வைத்துக் கொண்டனர்.

விருந்து விடிய விடிய களை கட்டியிருந்தது. அந்த நிலையில்தான் முழு நிர்வாண கோலத்தில் இவனா 20வது மாடியிலிருந்து கீழே விழுந்தார். அங்கிருந்து 6வது மாடியில் வந்து அவரது உடல் விழுந்தது. உடல் சிதறிய நிலையில் அவர் பிணமானார். இந்த வழக்கை அப்போது விபத்தாக போலீஸார் பதிவு செய்தனர்.

ஆனால் இது விபத்து அல்ல, கொலை என்று இவனாவின் குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்து மலேசிய கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த வாரம் தீர்ப்பளித்த கோர்ட், இது குறித்து போலீஸார் விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புள்ளது. எனவே மீண்டும் இதை கொலை என்ற நோக்கில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து தற்போது இதை கொலை வழக்காக மாற்றி போலீஸார் மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த கொலை வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்படுவதாக போலீஸ் குற்றப் புலனாய்வு பிரிவு தலைவர் ஹுசிர் முகம்மது கூறியுள்ளார். சம்பவத்தின்போது அங்கிருந்தவர்கள், கண்ணால் பார்த்த சாட்சியங்கள் விசாரணைக்கு அழைக்கப்படவுள்ளனர்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!