விரைவில் ஆளுநர் பதவியை ஏற்கும் பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்..!


இலங்கை வடக்கு மாகாண பகுதியின் ஆளுநர் பதவியை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சே வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டார். இதனை அடுத்து முதல் கட்டமாக இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இதற்கு முன்னர் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி மாகாணங்களுக்கான ஆளுநரை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இலங்கையின் வடக்கு பகுதியில் இலங்கை தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்து வருவதால் தமிழர் சார்ந்த ஒருவரை நியமிக்க ராஜபக்சே திட்டமிட்டிருந்தார்.

அதன்படி முன்னாள் கிரிக்கெட் வீரரும் தமிழருமான முரளிதரன் பெயர் இதற்கு அடிபட்டது. இந்த தகவலை முதலில் முரளிதரன் மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று ராஜபக்சே முரளிதரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஜனாதிபதியின் வேண்டுகோளை ஏற்று முரளிதரன் விரைவில் வடக்கு மாகாண ஆளுநர் பதவியை ஏற்றுக் கொள்வார் என தகவல்கள் வெளியாகின்றன.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!