இந்திய மருத்துவக்கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை.. கார் பின் சீட்டில் கொடூரமாக பலாத்காரம்!


ஹைதராபாத்தை பூர்விகமாக கொண்ட இளம் பெண் ரூத் ஜார்ஜ் (19). ரூத் ஜார்ஜ் அமெரிக்காவில், சிகாகோ இல்லினாய்ஸ் பல்கலைகழகத்தில் மருத்துவத்துறையில் இளங்கலை பயின்று வந்தார். மருத்துவ கல்லூரி மாணவியான ரூத், கடந்த சனிக்கிழமை கல்லூரிக்குச் சென்றவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என்று மகளை காணாமல் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் காணாமல் போன மாணவி குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது பல்கலைகழக வளாகத்தில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் ரூத் ஜார்ஜின் கார் நின்று கொண்டிருந்தது. காரின் அருகில் சென்றுப் பார்த்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர். காரின் பின் இருக்கையில் ரூத் சடலமாக கிடந்தார். பின்னர் ரூத் ஜார்ஜ்ஜின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.


பிரேத பரிசோதனையில் ரூத் ஜார்ஜ், கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதன் பின்னர் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்ததில், இளைஞர் ஒருவர் ரூத் ஜார்ஜை பார்க்கிங் ஏரியா வரையில் தொடர்ந்து பின் சென்றுள்ளார்.

அதன் பின்னர், சுமார் அரைமணி நேரம் கழித்து பார்க்கிங் ஏரியாவில் இருந்து அந்த இளைஞர் மட்டும் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வருகிறார். ஆனால் கடைசி வரை ரூத் ஜார்ஜ் வளாகத்தை விட்டு வெளியே வரவில்லை. இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பார்க்கிங் ஏரியாவில் இருந்து வெளியே வந்த டோனல்ட் துர்மன் என்ற இளைஞரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். போலீசாரின் தொடர் விசாரணையில், ரூத் ஜார்ஜை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை அவர் ஒப்புகொண்டுள்ளார். இந்த சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.-Source: top.tamil

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!