ஊழல் வழக்கிலிருந்து கோத்தபாய ராஜபக்சே விடுவிப்பு – பாஸ்போர்ட் ஒப்படைப்பு..!


டி.ஏ. ராஜபக்சே அருங்காட்சியகம் அமைப்பதில் அரசு நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் புதிய அதிபர் கோத்தபாய ராஜபக்சே விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது பாஸ்போர்ட்டும் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மகிந்த மற்றும் கோத்தபாய ராஜபக்சேக்களின் தந்தையான டி.ஏ. ராஜபக்சேவுக்கு அருங்காட்சியகம் அமைக்க மகிந்த ராஜபக்சே காலத்தில் முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் மோசடி நடைபெற்றது என்பது வழக்கு.

கோத்தபாய ராஜபக்சே மீது தொடரப்பட்ட இவ்வழக்கில் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. மேலும் கோத்தபாயவின் பாஸ்போர்ட்டும் முடக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையின் புதிய அதிபராக தேர்தலில் வெற்றி பெற்று பதவியேற்றார் கோத்தபாய ராஜபக்சே. இதனைத் தொடர்ந்து இந்த ஊழல் வழக்கில் இருந்து கோத்தபாய ராஜபக்சேவை விடுவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

மேலும் கோத்தபாயவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!