நான் அவரை லவ் பண்ணுறன்… சென்னை காதலரை மணக்கும் நிக்கி கல்ராணி


காதலரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக நடிகை நிக்கி கல்ராணி கூறியுள்ளார்.

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி மலையாள படத்தில் அறிமுகமான பிறகு தமிழில் ஜி.வி.பிரகாஷுடன் ‘டார்லிங்’ பேய் படத்தில் நடித்தார். அதன்பிறகு யாகவாராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக் கான் குமாரு, கலகலப்பு-2 என்று தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து பிரபலமானார்.

கன்னட, மலையாள படங்களிலும் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணி காதலில் விழுந்துள்ளதாகவும் காதலரை ரகசியமாக சந்தித்து வருவதாகவும் ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன. தற்போது இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு பதில் அளித்த நிக்கி கல்ராணி, “சென்னையை சேர்ந்த ஒருவரை நான் காதலிக்கிறேன். அவர் யார் என்பதை இப்போது வெளிப்படுத்த முடியாது. அவரை நான் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறேன்.

3 வருடங்களுக்கு பிறகு எங்கள் திருமணம் நடக்கும்” என்றார். நிக்கி கல்ராணி காதலிப்பது யார் என்று வலைத்தளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள். தற்போது 2 மலையாள படங்களிலும் ஒரு தமிழ் படத்திலும் நிக்கி கல்ராணி நடித்து வருகிறார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!