தூக்கில் தொங்கிய நண்பன்… துணிந்து காப்பாற்றிய 8ம் வகுப்பு மாணவன்! எப்படி தெரியுமா?


தற்கொலைக்கு முயன்ற தோழனை சிறுவனொருவன் காப்பாற்றிய சம்பவமானது ராமநாதபுரம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி பேரையூர் எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கு உட்பட்ட உடையார்கூட்டம் எனும் கிராமத்தில் வழிவிடுமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 48. இவருக்கு வடிவேலன் என்ற 13 வயது மகன் உள்ளார். அப்பகுதிக்கு அருகே உள்ள ஊராட்சி பள்ளியில் வடிவேலன் 8-ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

பள்ளி முடிந்தவுடன் நேற்று சக மாணவர்கள் அனைவரும் புளியந்தோப்பு பகுதிக்கு சென்று விளையாடிக்கொண்டிருந்தனர். வடிவேலனின் தோழனின் தந்தை சமீப காலத்தில் மறைந்தார். இதனால் மிகுந்த மன வேதனையை காணப்பட்டு வந்த அந்த மாணவன் திடீரென்று புளியமரத்தில் துணியை கட்டி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளான்.

இதனை கண்ட பிற மாணவர்கள் அலறியடித்து இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ஆனால் வடிவேலன் மட்டும் துரிதமாக செயல்பட்டு கயிறானது தூக்கிட்ட தோழனின் கழுத்தில் இறுகாத படி மாணவனை தூக்கி பிடித்துள்ளான். உடனடியாக சகமாணவர்கள் அக்கம்பக்கத்தினரை அழைத்துவந்து, தற்கொலைக்கு முயன்ற மாணவனை மீட்டு எடுத்தனர்.

தற்போது மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அபாய கட்டத்தை தாண்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. துரிதமாக செயல்பட்ட வடிவேலனை பெற்றோருடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வடிவேலனுக்கு ஒரு புத்தகத்தை பரிசாக கொடுத்து பாராட்டினார். வடிவேலனின் சமயோசித செயலை பாராட்டி அவனுக்கு அரசு விருது வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.-Source: times

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!