2 வயது குழந்தை மரணம்.. நெஞ்சை உலுக்கி எடுக்கும் காரணம்!


கும்பகோணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளதால் ஆயிரக்கணக்கான பேர் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களிலும் டெங்கு காய்ச்சலுக்கு பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பருவநிலை மாற்றம் காரணமாகவும், மழைநீர் தேங்குவதாலும் கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை கடித்து வருகின்றன. இதனால் டெங்கு மட்டுமின்றி பல்வேறு நோய்களும் தாக்கி வருகின்றன.

டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் சிறுவர்- சிறுமிகள், பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கும்பகோணத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 2 வயது குழந்தை பலியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம் காசிராமன் தெருவை சேர்ந்தவர் வேத வினோத். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஒரு வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் கிருத்தன்யா (வயது2). கிருத்தன்யாவுக்கு கடந்த சில தினங்களாக காய்ச்சல் அதிகமாக இருந்து வந்தது. இதனால் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் கிருத்தன்யாவை சேர்த்தனர். அங்கு குழந்தை சிகிச்சை பெற்று வந்தது.

கிருத்தன்யாவுக்கு தொடர்ந்து காய்ச்சல் அதிகமாக இருந்து வந்ததால் தஞ்சாவூர் தனி யார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று இரவு குழந்தை கிருத்தன்யா சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தாள்.

டெங்கு காய்ச்சலால் குழந்தை பலியான சம்பவம் கும்பகோணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!