கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்


கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்சல் 4 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன், பிக்சல் 4 XL ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் QHD+ OLED ஸ்கிரீன் கொண்டிருக்கிறது. இரு டிஸ்ப்ளேக்களிலும் 90 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது.

இரு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கான ஆண்ட்ராய்டு மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. இத்துடன் கூகுள் உருவாக்கிய டைட்டன் எம் செக்யூரிட்டி சிப் வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 12.2 எம்.பி. கேமரா, 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புகைப்படங்களை அழகாக்கும் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய பிக்சல் 4 ஸ்மார்ட்போன்களில் மோஷன் சென்ஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் பிராஜக்ட் சோலி மூலம் இயங்குகிறது. இது ஸ்மார்ட்போன் அருகாமையில் நிகழும் அசைவுகளை கண்டறியும் திறன் கொண்டிருக்கிறது.

இது ஸ்மார்ட்போனினை கையில் எடுக்க முற்படும் போது ஃபேஸ் அன்லாக் அம்சத்தை இயக்க தயார்படுத்தும். ஸ்மார்ட்போன் அருகாமையில் யாரும் இல்லையெனில் திரை ஆஃப் ஆகிவிடும்.

கூகுள் பிக்சல் 4 மற்றும் பிக்சல் 4 XL சிறப்பம்சங்கள்:

பிக்சல் 4: 5.7 இன்ச் 2280×1080 பிக்சல் FHD+ OLED 19:9 டிஸ்ப்ளே, 444 PPI, HDR வசதி
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– பிக்சல் 4XL: 6.3 இன்ச் 2960×1440 பிக்சல் குவாட் HD+ OLED 19:9 டிஸ்ப்ளே, 537 PPI, HDR வசதி
– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5
– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர்
– அட்ரினோ 640 GPU
– 6 ஜி.பி. DDR4X ரேம்
– 64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
– ஆண்ட்ராய்டு 9.0 பை
– டூயல் சிம் ஸ்லாட்
– 12.2 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 1.4μm பிக்சல், ƒ/1.7, 77° FOV, டூயல் PD ஆட்டோஃபோகஸ், OIS, EIS
– 16 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 1μm பிக்சல், f/2.4
– 8 எம்.பி. ஆட்டோஃபோகஸ் செல்ஃபி கேமரா, 1.22μm பிக்சல், f/2.0, 90° FOV
– ஆக்டிவ் எட்ஜ்
– வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68)
– ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3 மைக்ரோபோன்
– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
– யு.எஸ்.பி. டைப்-சி
– பிக்சல் 4: 2800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
– பிக்சல் 4XL: 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், Qi வயர்லெஸ் சார்ஜிங்

இரு ஸ்மார்ட்போன்களும் ஜஸ்ட் பிளாக், கிளியர்லி வைட் மற்றும் லமிட்டெட் எடிஷன் ஓ சோ ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. பிக்சல் 4 ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. வெர்ஷன் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 57,105) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 899 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 64,250) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிக்சல் 4XL ஸ்மார்ட்போனின் 64 ஜி.பி. மாடல் விலை 899 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 64,250) என்றும் 128 ஜி.பி. மாடல் விலை 999 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 71,400) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 24 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!