முகமது ஷமி உள்ளிட்ட பவுலர்களுக்கு கோலி பாராட்டு – முதல் டெஸ்டில் வெற்றி..!


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றதற்கு ஷமி உள்ளிட்ட பந்து வீச்சாளர்கல்தான் காரணம் என கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ரவீந்திர ஜடேஜா, அஷ்வின் இருவரும் அபாரமாக பந்துவீசினர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் நமது சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்சில் கொஞ்சம் அதிகமாக ரன்களை விட்டுக்கொடுத்தனர். ஆனால் நாங்களும் 500 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில் இதை ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும்.

இந்த ஆடுகளத்தில் 2-வது இன்னிங்சில்தான் பந்துவீச்சாளர்களின் தாக்கம் இருக்கும் என்பது தெரியும். மொகமது ஷமி 2-வது இன்னிங்சில் தொடர்ந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி வருகிறார். 5 விக்கெட் வீழ்த்திய 4 முறையும் 2-வது இன்னிங்சில் நிகழ்ந்தவைதான். இங்கு பேட்ஸ்மேன்கள் ரன்களை குவித்ததில் ஆச்சரியமில்லை. கடினமான இந்த ஆடுகளத்தில் சாதித்த பந்து வீச்சாளர்கள் பாராட்டுக்கு உரியவர்கள். ரோகித் சர்மா இரண்டு இன்னிங்சிலும், மயங்க் அகர்வால் முதலாவது இன்னிங்சிலும் அருமையாக ஆடினர் என தெரிவித்தார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!