கூகுளின் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன்..!


கூகுளின் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போனின் விவரம் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 10 ஸ்டேபில் அப்டேட் கடந்த வாரம் முதல் வழங்கப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளியாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஒன்பிளஸ் 7டி பெற இருக்கிறது. ஒன்பிளஸ் 7டி ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கூகுளின் முதன்மை செயலிகள் மற்றும் சேவைகள் உள்ளிட்டவை பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

கடந்த வாரம் ஹூவாய் நிறுவனம் தனது மேட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஆண்ட்ராய்டு 10 மற்றும் EMUI 10 தளத்துடன் வெளியிட்டது. எனினும், இதில் கூகுள் சேவைகள் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் கிடைக்கும் புதிய அம்சங்களை பார்ப்போம்


பிரைவசி கண்ட்ரோல்: பிரைவசி செட்டிங்களை மிக எளிமையாக ஒற்றை இடத்தில் மாற்றிமையக்க முடியும். இதனால் பயனர்கள் தங்களின் டேட்டா எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை தீர்மானிக்க முடியும்.

லொகேஷன் கண்ட்ரோல்: உங்களின் லொகேஷன் செயலிகளுடன் எப்போது பகிரப்படுகிறது என்பதை தீர்மானிக்க முடியும். இதற்கு எல்லா நேரமும், பயன்பாட்டில் இருக்கும் போது மட்டும் அல்லது எப்போதும் வேண்டாம் என மூன்று ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. பயனர்கள் இதில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.

ஸ்மார்ட் ரிப்ளை: குறுந்தகவல்களுக்கு நீங்கள் அனுப்ப நினைக்கும் பதில்கள் பரிந்துரைக்கப்படும். இதில் வெளியே உணவகம் செல்ல நண்பர் அழைக்கும் போது, குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்து வழியை அறிந்து கொள்ள முடியும்.

ஜெஸ்ட்யூர் நேவிகேஷன்: ஜெஸ்ட்யூர்களை கொண்டு நேவிகேஷன் சேவையை வேகமாக இயக்க முடியும். இதன் மூலம் அம்சங்களை திரையை தொடாமலேயே இயக்கலாம்.

டார்க் தீம்: இந்த அம்சம் கொண்டு ஸ்மார்ட்போன் பேட்டரி தீர்ந்து போகும் சமயத்தில் அதனை சிறிது நேரத்திற்கு பேக்கப் வழங்கும் வகையில் சேமிக்க முடியும்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!